Daily Thirukural : Kural #88

Today we are going to see the Eighth  kural from “Cherishing Guests ”

திருக்குறள்

Thirukkural / Holy Kural

Chapter 9.

அறத்துப்பால்

1.2 இல்லறவியல்

1.2  Domestic Virtue 

1.2.5  விருந்தோம்பல்

1.2.5  Cherishing Guests 

தமிழ்:-

88 – பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி

வேள்வி தலைப்படா தார்.

விளக்கம்:-

செல்வத்தைச் சேர்த்துவைத்து அதனை இழக்கும்போது, விருந்தோம்பல் எனும் வேள்விக்கு அது

பயன்படுத்தப்படாமற் போயிற்றே என வருந்துவார்கள்.

English :

88) With pain they guard their stores, yet ‘All forlorn are we,’ they’ll cry,

Who cherish not their guests, nor kindly help supply.

Explanation: 

Those who have taken no part in the benevolence of hospitality shall (at length lament) saying, “we have laboured and

laid up wealth and are now without support.”

4 thoughts on “Daily Thirukural : Kural #88

  1. R.Venkatachalam December 27, 2011 / 6:35 PM

    Hallow Mr.Surya Prekash,
    தங்களையும் என்னையும் இணப்பது திருக்குறள். நான் திருக்குறள்: புதிர்களும் தீர்வுகளும்// ஓர் உளவியல் பார்வை என்ற நூலையும் Tirukkural:Life Skills Coaching என்ற ஆங்கில நூலையும் எழுதி அவற்றை வெளி இடுவதற்கு முயற்சித்துக்கொண்டுள்ளேன் . 580 குறட்பாக்களுக்குமேல் இதுவரை யாரும் கூறாத விளக்கங்களையும் 30 மேற்பட்ட அதிகாரங்களுக்கு புதிய அதிகாரப்பொருள்களையும் தந்துள்ளேன். அந்த வகையில் தாங்கள் குறிப்பிட்டு இருக்கும் குறட்பாவிற்கு நான் தந்துள்ள பொருளைக்கூறவிழைகிறேன். தங்களுக்குப்பிடிக்கவில்லையெனில் என்னுடைய முகவரிக்கு எழுதுங்கள். எதிர்காலத்தில் தவிர்த்துவிடுகிறேன்.

    அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
    நல்விருந் தோம்புவான் இல்

    அகனமர்ந்து அதாவது பரிந்தோம்பி விருந்து படைப்பவன் வீட்டில் திருமகள் உறையும் என்ற சொன்ன திருவள்ளுவர் எங்ஙனம் இந்தக்குறளில் ”பரிந்தோம்பிய பின்னர் செல்வம் இல்லாத நிலை ஏற்படும் எனக்கூறுகிறார்? அதாவது அவர்களுடைய செல்வம் எவ்வாறு கரைந்தது?

    விடை வேள்வி தலைப்படாதவர் என்ற சொற்றொடரில் உள்ளது. விருந்தோம்பலை வேள்வி செய்வதைப்போல கண்ணும் கருத்துமாக முழு இதயத்துடன் அகனமர்ந்து செய்யாமல் ஆனால் திருமகள் வருவாள் எதிர்பார்த்துச் செய்ததனால் அவர்கள் வீட்டுக்கு செய்யாள் வரவில்லை. பரிந்து அதாவது பார்த்துப்பார்த்து ஒரு நல்ல உணவகத்தில் செய்வதைப்போல பரிமாறினார்கள். ஆனால் கூடவே திருமகள் வருவாள் எனவும் எதிர்பார்த்ததால் அவ்விருந்தோம்பலுக்கு வேள்வியின் தூய்மை இல்லாது போனதால் அவர்கள் வீட்டில் திருமகள் வரவில்லை.

    • SURYA January 8, 2012 / 11:41 AM

      அருமையான விளக்கம்..!! நீங்கள் இதை கண்டிப்பாக http://www.katturai.com/ ல் பகிரவும்.. உங்கள் இலக்கிய பணி மென்மேலும் வளர்ந்து மக்களுக்குப் பயன்பட என் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள்..:):)

      மிக்க நன்றி

  2. R.Venkatachalam March 5, 2012 / 9:08 PM

    சூர்ய பிரகாஷ் நான் உங்கள் தளத்தைப்பார்க்க மறந்து விட்டேன், இன்று தற்செயலாகக் கண்டேன். என்னுடைய புத்தக முயற்சி இன்னமும் முற்றுப்பெறவில்லை. ஃபேஸ் புக்கில் venkatachalam rangaswamy என்ற பெயரில் எழுதி வருகிறேன். நீங்கள் சொன்ன தளத்திற்குச் சென்று பார்த்தேன். ஆனால் எங்கே இடுகை செய்வது என்று தெரியவில்லை. அறிவுறுத்த இயலுமா?
    மிக்க நன்றி
    அர,வெங்கடாசலம்

    • SURYA March 10, 2012 / 8:51 AM

      உங்கள் கட்டுரையை இந்த http://www.katturai.com தளத்தில் பதிய முதலில் அதன் ஆசிரியருக்கு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும் அவர் அதை சரி பார்த்து வலையில் பதிவேற்றுவார். மேலும் தொடர்புக்கு ( ஆசிரியர்: மாயவரத்தான் http://www.mayavarathaan.in ) நிங்கள் இவரை துவிட்டரிலும் (Twitter: @mayavarathaan ) தொடர்பு கொள்ளலாம்.

      உங்கள் இலக்கிய பணி சிறப்படைய வாழ்த்துகள்

      மிக்க நன்றி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s